அடி! நானே உன் கண்ணாளன்: Adi ! Nane Un Kannalan (Tamil Edition) Kindle Edition

450.00


Know more


Share it:

காதல் என்பது கெஞ்சி பெறுவது அல்ல அது ஒரு உணர்வு அவரவர் மனதில் இருந்து தானாக வெளிப்பட வேண்டும் அப்படியாக நம் நாயகியின் மனதில் உள்ள காதல் வெளி வரும் தருணத்திற்காக காத்திருக்கும் கதாநாயகன் காத்திருப்பில் ஒவ்வொரு நொடியும் தவித்து போகிறான். நாயகியின் அவள் காதலை புரிந்து கொள்ள முடியமல் தவித்து பின் புரிந்து கொண்டு அதனை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பாள். இருவரின் தவிப்பிற்கு இடையே கதாநாயகனின் காதல் குறும்புகளும் அதனை உள்ளூர ரசித்தாலும் வெளியே முறைக்கும் கதாநாயகியின் சின்ன சின்ன செல்ல சண்டைகளுமாக இருவரின் காதலும் இணையும் இனிய தருணங்கள் பற்றி கூறுவதே இந்த ” அடி! நானே உன் கண்ணாளன் ”
*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*
” ஏன் இப்படி பண்ற ? எனக்கு கஷ்டமா இருக்கு ” என்று அழுகையை அடக்கிய குரலில் கூறினாள்.

” கஷ்டப்படு நல்லா கஷ்டப்படு ” என்றான் அவன் எரிச்சல் குரலில்.

” …. ”

” நான் பட்ட வேதனையில பாதியாவது படு. அப்ப தான் உனக்கு தெரியும் ”

” நிலைமை புரியாம பேசாத ப்ளீஸ் ”

” வேணாம். இது எதுவும் சரிப்படாது .. பை ” என்று அழைப்பை துண்டித்து விட்டான்.

பிடி கொடுக்காமல் அவன் பேசுவதற்கு காரணம் தனது குடும்பம் தானே என்று வேதனையுடன் எண்ணியவள் எதிரே கிளம்பிய பேருந்தை வெறித்து பார்த்தாள்.

பேருந்து கிளம்பி சென்றதை பார்த்தும் வெறுமென அமர்ந்திருந்தாள்.

*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*

” சே ” என்ற வெறுப்புடன் திரும்பியவளது கையை பற்றி இழுத்து பின்னால் இருந்து அவளை அணைத்தான் அவன்.

அவள் நகராமல் இருக்க மறுகையால் அவளை சுற்றி வளைத்து பிடித்து கொண்டு அவளது கூந்தலில் முகம் புதைத்தான்.

” விடு.. விடு ப்ச் ” என்று திமிறினாள் .

” ம்ம்ம்ம்ஹா.. என்ன ஸ்மெல் . உங்க ஹேர்ல இருந்து வர ஷாம்பு ஸ்மெல் அண்டு இந்த ஜாஸ்மீன் ப்பிளவர் ப்ப்பா அள்ளுது.. விட்டா இப்பவே ” என்று அவன் முடிக்கும் முன் ” சட் அப் ” என்று முழுமுயற்சியுடன் விடுபட போராடினாள்.

” ஒகே பேச வேணாம் ஆக்சன்ல காட்ட சொல்றீங்களா ” என்று சிரித்தவன் பிடி இறுகி போனது.

புடவை அவள் உடலில் இருந்து விலகி வெண்மையான இடையை வெளி உலகிற்கு காட்டிவிட அதனை கண்டவன் தனது கரத்தை அவள் இடையில் வைத்து அழுத்து பிடித்தான்.

” ஹே . என்ன என்ன பண்ற ..வி விடு ” என்று தடுமாற்றத்துடன் கூறினாள் அவள்.

” இப்ப விட்டுட்டா இனி மொத்தமான என்னை விட்டு போக தான் நீங்க நினைப்பீங்க ” என்றவன் அவளை திருப்பி தனது கைக்குள் வைத்து கொண்டான்.

நகர முடியாமல் அவனை முறைத்து பார்த்தாள்.

*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*

” குட் மார்னிங் மேடம் ” என்று விட்டு புரண்டு படுத்தான்.

” டேய் எந்திரிடா .. எனக்கு இருக்க கோபத்துல நாளைக்கு நீயூஸ் பேப்பர்ல வந்துருவேன் பார்த்துக்கோ ” என்றாள்.

” என்னது ” என்று தலையை அழுத்தி பிடித்தபடி கேட்டான்.

” தூங்கிக் கொண்டிருந்த கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவினு கொட்ட எழுத்து வரும் பாரு எங்க அந்த அம்மி கல்லு ” என்று தேடினாள்.

” என்னாச்சு இப்ப ” என்று பயத்துடன் எழுந்து அமர்ந்தான்.

” பின்ன நேத்து கொஞ்ச நஞ்ச ஆட்டமா டா போட்ட ”

” நேத்தா . . மீட்டிங் முடிஞ்சு வந்ததும் சமத்தா படுத்து தூங்கிட்டனே ”

” சமத்து ? .. அடிச்சேனு வை ”

அவள் கை உயர்த்தி கொண்டு அருகில் வரவும் வேகமாக பின்னால் சென்று ” என்ன ஏதாவது தப்புனு சொல்ற சரிய பண்ணிட்டனா ” என்று கண்ணடித்து கேட்டான் அவன்.

” என்னது ” என்று புரியாமல் விழித்தவள் அவனது பார்வை புரிந்து விட ” சீ ..இடியட் ” என்று மீண்டும் அவனை அடிக்க வந்தாள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அடி! நானே உன் கண்ணாளன்: Adi ! Nane Un Kannalan (Tamil Edition) Kindle Edition”

Your email address will not be published. Required fields are marked *

Custom Tab Content here.
Tail sed sausage magna quis commodo snasae. Aliquip strip steak esse ex in ham hock fugiat in. Labore velit pork belly eiusmod ut shank doner capicola consectetur landjaeger fugiat excepteur short loin. Pork belly laboris mollit in leberkas qui. Pariatur snasae aliqua pork chop venison veniam. Venison sed cow short loin bresaola shoulder cupidatat capicola drumstick dolore magna shankle.